• திருஞானசம்மந்தர்
    Thirugyanasambandhar
    அப்பர்
    Appar
    சுந்தரர்
    Sundarar
    மாணிக்கவாசகர்
    Manikkavasakar
Next Pradosham on: Sat Dec 28 2024
குரோதி வருஷ மஹாளயபக்ஷ தர்ப்பண சங்கல்பம் 02-09-2020 முதல் 18-09-2020 வரை
தொகுத்து வழங்கியவர்கள் ஈஷ்வர் கோபால்,ராமகிருஷ்ணன் ராமசந்திரன் (jr) மற்றும் சுரேஷ் ராமசந்திரன் இது வாக்கியப் பஞ்சாங்க அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
மஹாளய தர்பணம் – சில குறிப்புகள்

வருஷ ப்ரத்யாப்திக ஸ்ரார்த்த திதி தாயாருக்கோ, தந்தைக்கோ மஹாளயபக்ஷ நடுவில் வருமாயின், ஸ்ரார்த்தம் முதலின் செய்யப்படவேண்டும். ஈடாக, பின் வரும் க்ருஷ்ணபக்ஷ திதியில் மஹாளயபக்ஷம் அப்பா, அம்மா, மூதாதையர்களுக்கு செய்யவேண்டும்.

ஏதோ ஒரு காரணத்தினால் மஹாளயபக்ஷ தர்பணம் செய்யமுடியாமல் போனால், ஈடாக வரும் கார்த்திகை க்ருஷ்ணபக்ஷத்திற்கு முன்னால் செய்துமுடிக்-கப்படவேண்டும். மஹாளயபக்ஷம் செய்யும்போது, ஸங்கல்பம் முடிந்த உடன் ஹிரண்யம் (பணம்) ப்ராஹ்மணர்களுக்கு தத்தம் கொடுக்கவேண்டும் (இதன் பின் தர்பணம்).

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாஸ்யைக்கு முந்திய 14 நாட்களுக்கு மஹாளயபக்ஷம் என்று பெயர். மஹாளய தர்பணம் செய்யாவிட்டால் பித்ருக்களின் ஸாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஸாஸ்திரம் கூறுகிறது. தகப்பனார், தாயார் ஸ்ரார்த்த திதிகளிலாவது அல்லது மஹாளயபக்ஷத்தில் பஞ்சமி திதிக்கு மேல் மத்யாஷ்டமி, வ்யதீபாதம், கஜச்சாயை மஹாபரணி முதலிய புண்ய தினங்களிலாவது மஹாளய தர்பணம் செய்யவேண்டும்.

ஆயுதம் முதலியவைகளால் பிதா மரணம் அடைந்திருந்தால் சஸ்த்ரஹத மஹாளயம் என்ற முறையையொட்டி சதுர்த்தஸி திதியில்தான் மஹாளய தர்ப்பணம் செய்யவேண்டும்.

எந்த காரணத்தினாலாவது மஹாளய பக்ஷத்தில் தர்ப்பணம் செய்ய முடியாவிட்டால் ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலாவது க்ருஷ்ண பக்ஷத்தில் அந்த தர்ப்பணத்தைச் செய்யவேண்டும்.

மஹாளயம் குறிப்புகள்:

குறிப்பு 1: ஒரு கூர்ச்சம் பண்ணுபவர்கள் ஸகாருணீக வர்கத்வய பித்ரூண் ஆவாஹயாமி என்று ஆவாஹனம் பண்ணவும்.

குறிப்பு 2: (தந்தை/தாய் வழி தர்ப்பணம் முடிந்தபின் - கீழ்க்கண்ட மந்திரத்தைக் கூறி கூடுதலாக தர்ப்பணம் கொடுக்கவும். ஞாதாக்யாத வர்கத்வய பித்ரூன் ஸ்வதா நமஸ்தர்பயாமி" என்று சொல்லக்கூடாது அதற்கு பதில்) தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மணாம் வஸு-வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவஸிஷ்ட்டாணாம் ஸர்வேஶாம் காருணீக பித்ரூன் ஸ்வதா நமஸ் தர்ப்பயாமி (மூன்று தடவை அர்க்யம் விடவும்).

குறிப்பு 3: (யதாஸ்தானம் - முதலில் கூர்ச்சத்தை எள்ளை எடுத்து ஆவாஹனம் செய்த மாதிரி எடுத்துப்போடவும்) - ஆயாத பிதர: ஸோம்யா கம்பீரை:பூர்வ்யை: ப்ரஜாமஸ்மப்யம் தததோ ரயிம் ச தீர்காயுத்வம் ச ஶதஶாரதஞ் ச அஸ்மாத் கூர்ச்சாத் (ஒரு கூர்ச்சமா இருக்கரவா) ஸகாருணீக வர்க்கத்வய பித்ரூன் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று எள்ளைப்போடவும்

தனித்தனியாக மூன்று கூர்ச்சம் வைத்துக்கொண்டிருந்தால் – பித்ரு, பிதாமஹ, ப்ரபிதாமஹான் –(அம்மா இல்லாதிருப்பின் மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹீஸ்ச்ச) (அம்மா இருந்தால்…… பிதாமஹீ, பிது: பிதாமஹீ, பிது:ப்ரபிதாமஹீ ) யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று முதல் கூர்ச்சத்தில் போடவும்.

இரண்டாவது கூர்ச்சத்திற்கு ஸபத்னீக மாதாமஹ மாதுபிதாமஹ: மாது ப்ரபிதாமஹான் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று இரண்டாவது கூர்ச்சத்தில் எள்ளை போடவும்.

மூன்றாவது கூர்ச்சத்திற்கு : தத்தத் கோத்ராணாம் தத்தத் ஶர்மாணாம் வஸு-வஸு ஸ்வரூபாணாம் பித்ருவ்ய மாதுலாதி வர்கத்வய அவஸிஷ்ட்டானாம் ஸர்வானாம் ஸகாருணீக பித்ரூன் யதாஸ்த்தானம் ப்ரதிஷ்டாபயாமி என்று கூர்ச்சத்தில் எள்ளை போடவும்

இங்கிருந்து தொடங்கவும்.....(எல்லா வேதங்களுக்கும் இந்த ஸங்கல்ப மந்திரம் பொதுவானது. ஆசமனம்.......அச்சுதாய நம:, கோவிந்தய நமஹ, கேசவா, நாராயணா........தாமோடரா......பிறகு...........சுக்லாம் பரதரம் விஷ்ணும்......................ஓம் பூ: +பூர்புவஸ்வரோம், ம்மோபாத்த சமஸ்த ......+ ப்ரீத்யர்த்தம், அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷ, ஸபாஹ்ய, அப்யந்தர: சுசிஹி மானஸம் வாசிகம், பாபம், கர்மணா சமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நசம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஸ்ச்ச கரணம்சைவ சர்வம் விஷ்ணுமயம் ஜகத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராக்யயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஸ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்சதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஷ்வே ஸஹாப்தே அஸ்மின்வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்ட்யாம் ஸம்வத்சராணாம், மத்யே..... பிறகு கீழ்க்கண்ட மந்திரத்த்த கூறவும்....................... ....... ...............