• திருஞானசம்மந்தர்
  Thirugyanasambandhar
  அப்பர்
  Appar
  சுந்தரர்
  Sundarar
  மாணிக்கவாசகர்
  Manikkavasakar
Next Pradosham on: Sat Mar 7 2020
விகாரி வருஷ ஷண்ணவதி தர்பண மந்திரங்களின் சங்கல்ப தொகுப்பு ஏப்ரல் - 2019- ஏப்ரல் - 2020
தொகுத்து வழங்கியவர்கள் ஈஷ்வர் கோபால்,ராமகிருஷ்ணன் ராமசந்திரன் (jr) மற்றும் சுரேஷ் ராமசந்திரன் இது வாக்கியப் பஞ்சாங்க அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது.
குறிப்பு: ஷண்ணவதி தர்ப்பணத் திதி செய்யும் நாளில் 20 நாழிகை இருப்பு இருக்கவேண்டும் உதாரணத்திற்கு சூரியோதயத்திலிருந்து 8 மணிநேரம். தர்ப்பணம் அந்நாளிலேயே செய்ய வேண்டும்.

ஸ்ரத்தயாக பல கர்மகார்யங்களைச் செய்யும் ஆன்மீக அன்பர்களின் வேண்டுகோளுக்கினங்க, ஒரு வருடத்திற்குறிய விளம்பி வருஷத்தினுடைய ஷண்ணவதி தர்பண ஸங்கல்பங்களை தொகுத்துக் கொடுத்துள்ளோம். (ஏப்ரல் (சித்திரை) 2018 – ஏப்ரல் (பங்குனி) 2019). வாழ்வில் ஒருமுறையாவது ஷண்ணவதி எனிகின்ற 96 முறை தர்பணங்களை செய்வது, பித்ருக்களின் ப்ரீதியை பெருவதோடுமட்டுமல்லாது, வரும் 7 தலைமுறைக்கு அளப்பரிய பலன்களை தரவல்லது என்கிறது ஸாஸ்த்ரம்.

ஷண்ணவதி என்றால் 96, ஆனால் இவ்வருடம் சில திதிகள் முன்கூட்டியே வருவதால் 98 (இரண்டு கூடுதலாக) வருகிறது. சாதாரணமான கணக்குப்படி :-

அமாவாஸ்யை (மஹாளயம் சேர்த்து) 13, ஸங்க்ரமணம்: 12, அமாவாஸ்யை (மஹாளயம் சேர்க்காமல்): 14, க்ருதயுகாதி 1, த்ரேதாயுகாதி 1, த்வாபரயுகாதி 1, கலியுகாதி 1, மன்வந்தரம் 14, வைத்ருதீ யோகம் 15 (2 அதிகம் இவ்வருடம்), வ்யதீபாத யோகம் 14 (1 அதிகம் இவ்வருடம்) திஸ்ரேஷ்டகா 4, அஷ்டகா 4, அன்வஷ்டகா 4 = ஆக மொத்தம் : 98

யார் ஷண்ணவதி செய்வதில்லையோ, ஆனால் ஸங்க்ரமணம் / அமாவாஸ்யை / மஹாளயம் செய்கிறார்களோ அவர்கள் ஒரு தர்பணம் செய்தால் போறும். உதாகரணத்திற்கு – வ்யதீபாதமும், அமாவாஸ்யையும் ஒரே தினத்தில் வரும் பக்ஷத்தில் – ஷண்ணவதி செய்பவர்கள் இரண்டு தர்பணம்மும் மற்றவர்கள் ஒரு தர்பணமும் செய்யவேண்டும்.

ஹிரண்ய ரூபமாக செய்பவர்களுக்கு தனியாக கோடிட்டுக்காட்டப்பட்டுள்ளது.

இத்துடன் இரண்டு (எண்வரிசை இல்லாமல்) ஸங்கல்பங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. ஒன்று போதாயன அமாவாஸ்யை – இவ்வருடம் ஒன்றுதான் வருகிறது.
14.05.2018 – வெள்ளிக்கிழமை – சித்திரை 31 - போதாயண தர்பணம்
இதேபோல் சந்த்ரக்ரஹணம் (ஸோமோபாரக) தர்பணம் (எண்வரிசை இல்லாமல்) ஸங்கல்பமும் சேர்க்கப்பட்டுள்ளது.
28.07.2018 – சனிக்ழமை – ஆடி 12 – சந்த்ர க்ரஹண (ஸோமோபாரக) தர்பணம்

ஸங்க்ரமண தர்பணம் – சில குறிப்புகள் :

ஸங்க்ரமணத்தின் போது ஸ்ரார்த்தம் வருமாயின், பின் கர்தா முதலில் தர்பணம் செய்துவிட்டு, ஸ்ரார்த்தம் செய்து சாப்பிடவேண்டும்.

உத்தராயண, தக்ஷிணாயன – அயன தர்பணம் எப்பொழுதுமே உத்தராயணம் உள்ளபோதே செய்யப்படவேண்டும் . ஆடி (ஆஷாட) மாதத்திற்கு 8 மணி நேரம் முந்தியும் – தை (மகரம்) மாதத்திற்கு பிந்தியும் புண்யகால தர்பணம் செய்யவேண்டும்.

சூரியன் ஸ்திர ராஸியில் ப்ரவேசிப்பது (ரிஷபம், சிம்மம், கும்பம், வ்ருஶ்சிகம்) விஷ்ணுபதிகாலம்.

சூரியன் மகரம், கடகம் ப்ரவேசிப்பது அயன புண்யகாலம். சூரியன் துலாம், மேஷத்தில் ப்ரவேசிப்பது விஷு புண்யகாலம் – ஊர்த்வ விஷு மேஷம் அதோ விஷு துலாம். சூரியன் உபய ராசியில் ப்ரவேசிப்பது (மிதுனம், கன்னி தனுசு, மீனம்) 'ஷடஶீதி'.

மஹாளய தர்பணம் – சில குறிப்புகள்

வருஷ ப்ரத்யாப்திக ஸ்ரார்த்த திதி தாயாருக்கோ, தந்தைக்கோ மஹாளயபக்ஷ நடுவில் வருமாயின், ஸ்ரார்த்தம் முதலின் செய்யப்படவேண்டும். ஈடாக, பின் வரும் க்ருஷ்ணபக்ஷ திதியில் மஹாளயபக்ஷம் அப்பா, அம்மா, மூதாதையர்களுக்கு செய்யவேண்டும்.

ஏதோ ஒரு காரணத்தினால் மஹாளயபக்ஷ தர்பணம் செய்யமுடியாமல் போனால், ஈடாக வரும் கார்த்திகை க்ருஷ்ணபக்ஷத்திற்கு முன்னால் செய்துமுடிக்-கப்படவேண்டும். மஹாளயபக்ஷம் செய்யும்போது, ஸங்கல்பம் முடிந்த உடன் ஹிரண்யம் (பணம்) ப்ராஹ்மணர்களுக்கு தத்தம் கொடுக்கவேண்டும் (இதன் பின் தர்பணம்).

புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாஸ்யைக்கு முந்திய 14 நாட்களுக்கு மஹாளயபக்ஷம் என்று பெயர். மஹாளய தர்பணம் செய்யாவிட்டால் பித்ருக்களின் ஸாபத்திற்கு ஆளாக நேரிடும் என்று ஸாஸ்திரம் கூறுகிறது. தகப்பனார், தாயார் ஸ்ரார்த்த திதிகளிலாவது அல்லது மஹாளயபக்ஷத்தில் பஞ்சமி திதிக்கு மேல் மத்யாஷ்டமி, வ்யதீபாதம், கஜச்சாயை மஹாபரணி முதலிய புண்ய தினங்களிலாவது மஹாளய தர்பணம் செய்யவேண்டும்.

ஆயுதம் முதலியவைகளால் பிதா மரணம் அடைந்திருந்தால் சஸ்த்ரஹத மஹாளயம் என்ற முறையையொட்டி சதுர்த்தஸி திதியில்தான் மஹாளய தர்ப்பணம் செய்யவேண்டும்.

எந்த காரணத்தினாலாவது மஹாளய பக்ஷத்தில் தர்ப்பணம் செய்ய முடியாவிட்டால் ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலாவது க்ருஷ்ண பக்ஷத்தில் அந்த தர்ப்பணத்தைச் செய்யவேண்டும்.

இந்த மூன்று மொழிகளின் ஸங்கல்பங்களை தொகுத்து வழங்க பேருதவியாக இருந்த ராமகிருஷ்ணன் ராமசந்திரன் (jr) மற்றும் சுரேஷ் ராமசந்திரனுக்கு என் மனமார்ந்த நன்றிகள் உரித்தாகுக

பித்ருகர்மாக்களை சரிவர செவ்வனே செய்து பித்ருக்களின் கருணையும், பார்வதி பரமேஶ்வர் மற்றும் ஶ்ரீ பூமி நீளா ஸமேத நீலமணிநாத ஸ்வாமியின் பரிபூர்ண க்ருபா கடாக்ஷமும் எல்லோருக்கும் கிடைக்கவும், எல்லோரும் இதேபோல் ஸாஸ்த்ரத்தில் மேலும் நம்பிக்கையுள்ளவர்களாக இருக்கவும் வேண்டிக்கொள்கிறோம்.
என்றும் ஸனாதன தர்மத்தின் ஸேவையில்,
ஈஷ்வர்க கோபால்
06.04.2018 – www.pradosham.com – info@pradosham.com
இங்கிருந்து தொடங்கவும்…..(எல்லா வேதங்களுக்கும் இந்த ஸங்கல்ப மந்திரம் பொதுவானது. ஆசமனம்…..ஸங்கல்பம்.. இங்கிருந்து தொடங்கவும்…..(எல்லா வேதங்களுக்கும் இந்த ஸங்கல்ப மந்திரம் பொதுவானது. ஆசமனம்…....அச்சுதாய நம:, கோவிந்தய நம:, கேஶவா, நாராயணா ….....தாமோதரா …... பிறகு …........ ஶுசுக்லாம் பரதரம் விஷ்ணும் …................... ஓம் பூ: பூர்புவஸ்வரோம்
மமோபாத்த ஸமஸ்த …... ப்ரீத்யர்த்தம், அபவித்ரா: பவித்ரோவா சர்வாவஸ்த்தாம் கதோபிவா, யெஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸபாஹ்ய, அப்யந்தர: ஶுசி: மானஸம் வாசிகம், பாபம், கர்மணா ஸமுபார்ஜிதம், ஸ்ரீராம, ஸ்மரணேநைவ, வ்யபோஹதி நஶம்ஸய: ஸ்ரீராம ராம ராம திதிர்விஷ்ணு: ததாவார: நக்ஷத்ரம், விஷ்ணுரேவச யோகஶ்ச கரணம்சைவ ஸர்வம் விஷ்ணுமயம் ஜகத், ஸ்ரீ கோவிந்த கோவிந்த அத்யஸ்ரீ பகவத: மஹா புருஷஸ்ய விஷ்ணோராஞயயா ப்ரவர்த்தமானஸ்ய, ஆத்யப்ரஹ்மண: த்விதீய பரார்த்தே ஶ்வேத வராஹ கல்பே, வைவஸ்வத மண்வந்த்ரே அஷ்டாவிம்ஶதி, தமே, கலியுகே, ப்ரதமேபாதே ஜம்பூத்வீபே, பாரதவர்ஷே, பரதகண்டே மேரோ: தக்ஷிணே பார்ஶ்வே ஸஹாப்தே அஸ்மின் வர்த்தமாணே, வ்யாபஹாரிகே, ப்ரபவாதி, ஷஷ்ட்யாம் ஸம்வத்ஸராணாம், மத்யே..... பிறகு கீழ்க்கண்ட மந்திரத்த்த கூறவும்....................... ....... ............... பின் கீழ்க்கண்ட மந்திரத்தை கூறவும்........